பிற மொழி இசை ஆல்பங்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் இசை ஆல்பங்கள் வெளிவருவது மிகக் குறைவு. எனினும் நல்ல இசை ஆல்பப் பாடல்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.அந்த முறையில் 1998ல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கு திரு.உத்பால் பிஸ்வாஸ் இசையமைத்து ஹரிஹரனும் சுஜாதாவும் பாடி வெளியான காதல் வேதம் இசை ஆல்ப பாடல்கள் என் மனதை விட்டு இன்றும் கூட நீங்காமலிருக்கின்றன.
அவற்றில் சிலவற்றை YOUTUBE வீடியோவாக மாற்றியுள்ளேன். இதமான இசையை ரசிப்பவர்கள் இது போன்ற பாடல்களுக்கு மனதை பறிகொடுப்பது நிச்சயம்.
கண்ணில் என்னென்ன மயக்கம்
நீ என்பதில் நானும் அடங்கும்
நட்சத்திர பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா
மலையும் நதியும் நிலமும் ஒருநாள் மறையும் காலம் வந்தாலும்